close
Choose your channels

நிர்வாண வீடியோ அனுப்பிய காதலி: ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து கம்பி எண்ணும் காதலன்:

Monday, December 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நிர்வாண நிலையில் இருக்கும் வீடியோ மற்றும் குளிக்கும் போது எடுத்த வீடியோக்களை காதலன் வற்புறுத்தியதால் காதலி அனுப்பிய நிலையில் அந்த வீடியோக்களை காதலன் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த அஜித்குமார் என்ற 19 வயது இளைஞனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாற, இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பேசி கொண்டிருந்ததோடு வாட்ஸ் அப் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் வீடியோ காலிலும் பேசி வந்தனர்

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் காதல் எல்லை மீறி காதலன் வற்புறுத்தலுக்கு இணங்கி குளிக்கும் வீடியோ மற்றும் நிர்வாண நிலையில் உள்ள வீடியோக்களை கல்லூரி மாணவி தனது காதலனுக்கு அனுப்பி உள்ளார். இந்த வீடியோக்களை அவ்வப்போது பார்த்து ரசித்த காதலன் அவற்றை சேமித்து வைத்திருந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் காதலனுடன் பேசுவதை கல்லூரி மாணவி தவிர்த்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், தான் சேமித்து வைத்திருந்த காதலியின் நிர்வாண வீடியோ மற்றும் குளிக்கும் வீடியோக்கள் அனைத்தையும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டார். இந்த வீடியோக்கள் பயங்கர வைரல் ஆன நிலையில் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி போலீசில் புகார் கொடுக்க, தற்போது காதலன் அஜித்குமார் கம்பி எண்ணி கொண்டிருக்கின்றார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment