வயிற்றை கிழித்து திருடப்பட்ட 19 வயது பெண்ணின் குழந்தை! ஃபேஸ் புக் மூலம் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

  • IndiaGlitz, [Saturday,May 18 2019]

அமெரிக்காவை சேர்ந்த 19 வயது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து ஒரு குடும்பமே அவருடைய குழந்தையை திருடி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மார்லன் ஓச்சோ என்ற பெண், ஒன்பது மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இவரை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு, நைசாக பேசி வர வழைத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர் வயிற்றில் உள்ள குழந்தையை திருடியுள்ளனர்.

மார்லன் ஓச்சோ கடந்த மாதம் ஏப்ரல் 23 ஆம் தேதி, வெளியில் செல்வதாக கூறி காரில் சென்றுள்ளார். இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால், அவருடைய குடும்பத்தினர் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர்.

ஆனால் அவரிடம் இருந்து ஒரு மெசேஜ் மட்டுமே வந்துள்ளது. அதில் சிறு வேலை காரணமாக தற்போது தன்னால் வீட்டிற்கு வர முடியாது என்று கூறியுள்ளார். எனினும் போலீசார் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் 46 வயதான கிலாரிஸ் என்ற பெண் மருத்துவமனைக்கு குழந்தையுடன் வந்தார். அவர் மருத்துவர்களிடம் தனக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததாகவும், ஆனால் குழந்தை எந்த அசைவும் இல்லாமல் இருப்பதால் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மற்றும் கிலாரிஸ் டிஎன்ஏ பொருந்தாததால் சந்தேகம் அடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு புகார் கொடுத்தனர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கிலாரிஸிடம் விசாரணை மேற்கொண்டனர். பின் அவருடைய வீட்டை சோதனையிட்ட போது, வீட்டிற்கு பின் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடைத்துள்ளது.

அதனை சோதித்தபோது ஏப்ரல் மாதம் காணாமல் போன 19 வயதான மார்சல் ஓசோவின் சடலம் என போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து கிலாரிஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.

இவர்கள் மார்லன் ஓச்சோவிடம் ஸ்புக் மூலம் அன்பாக பேசி, குழந்தைக்கு ஆடைகள் தருவதாக வரவழைத்து, அவரின் வயிற்றில் உள்ள குழந்தையின் திருடுவதற்காக வீட்டில் அடைத்து வைத்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அவர் இறந்ததும் அவருடைய வயிற்றை கிழித்து குழந்தையை திருடியுள்ளனர்.

கிலாரிசின் இந்த செயலுக்கு உடந்தையாக இருந்த, கணவர் , மகள் மற்றும் மகளின் ஆண் நண்பர் ஆகிய நான்கு பேரை, கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

More News

வகுப்பறையில் தூக்கில் தொங்கிய தமிழக மாணவர்! டெல்லி பல்கலையில் பரபரப்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் தமிழத்தின் வேலூர் பகுதியை சேர்ந்த எம்.ஏ இறுதியாண்டு மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

டப்பிங் கலைஞரிடம் மன்னிப்பு கேட்ட 'அயோக்யா' நாயகி!

விஷால், ராஷிகண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'அயோக்யா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

முன்ஜாமீனா? கைதா? கமல் மனுமீது திங்களன்று தீர்ப்பு 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கமல்ஹாசன் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம்

'இந்தியர்' அடையாளம் போதும், இந்து அடையாளம் வேண்டாம்: கமல்ஹாசன்

தேர்தல் பிரச்சாரம் சற்றுமுன் முடிவடைந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 'இந்து மதம் என்ற அடையாளம் ஆங்கிலேயர் தந்தது,

ஆர்யாவுக்கு வாழ்த்து கூறிய சூர்யா!

சூர்யாவும் ஆர்யாவும் இணைந்து நடித்த 'காப்பான்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஆர்யாவின் படம் ஒன்றுக்கு சூர்யா இன்று தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.