வயிற்றை கிழித்து திருடப்பட்ட 19 வயது பெண்ணின் குழந்தை! ஃபேஸ் புக் மூலம் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவை சேர்ந்த 19 வயது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து ஒரு குடும்பமே அவருடைய குழந்தையை திருடி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்லன் ஓச்சோ என்ற பெண், ஒன்பது மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இவரை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு, நைசாக பேசி வர வழைத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர் வயிற்றில் உள்ள குழந்தையை திருடியுள்ளனர்.
மார்லன் ஓச்சோ கடந்த மாதம் ஏப்ரல் 23 ஆம் தேதி, வெளியில் செல்வதாக கூறி காரில் சென்றுள்ளார். இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால், அவருடைய குடும்பத்தினர் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர்.
ஆனால் அவரிடம் இருந்து ஒரு மெசேஜ் மட்டுமே வந்துள்ளது. அதில் சிறு வேலை காரணமாக தற்போது தன்னால் வீட்டிற்கு வர முடியாது என்று கூறியுள்ளார். எனினும் போலீசார் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் 46 வயதான கிலாரிஸ் என்ற பெண் மருத்துவமனைக்கு குழந்தையுடன் வந்தார். அவர் மருத்துவர்களிடம் தனக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததாகவும், ஆனால் குழந்தை எந்த அசைவும் இல்லாமல் இருப்பதால் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மற்றும் கிலாரிஸ் டிஎன்ஏ பொருந்தாததால் சந்தேகம் அடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு புகார் கொடுத்தனர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கிலாரிஸிடம் விசாரணை மேற்கொண்டனர். பின் அவருடைய வீட்டை சோதனையிட்ட போது, வீட்டிற்கு பின் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடைத்துள்ளது.
அதனை சோதித்தபோது ஏப்ரல் மாதம் காணாமல் போன 19 வயதான மார்சல் ஓசோவின் சடலம் என போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து கிலாரிஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.
இவர்கள் மார்லன் ஓச்சோவிடம் ஸ்புக் மூலம் அன்பாக பேசி, குழந்தைக்கு ஆடைகள் தருவதாக வரவழைத்து, அவரின் வயிற்றில் உள்ள குழந்தையின் திருடுவதற்காக வீட்டில் அடைத்து வைத்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அவர் இறந்ததும் அவருடைய வயிற்றை கிழித்து குழந்தையை திருடியுள்ளனர்.
கிலாரிசின் இந்த செயலுக்கு உடந்தையாக இருந்த, கணவர் , மகள் மற்றும் மகளின் ஆண் நண்பர் ஆகிய நான்கு பேரை, கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com