கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

இந்தியாவிலேயே மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா மாநிலம் மாறி வருவது கேரளா மக்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

சமீபத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த கொரோனா வைரஸ் ஒவ்வொரு மாநிலமாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் கேரளாவில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது

தமிழகத்தில் வெறும் 27 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் பல மடங்கு அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது கேரளாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று எண்ண தோன்றுவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.