கொரோனாவால் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 19 லட்சம் மக்கள் இறக்க நேரிடும்!!! WHO கணிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் கடும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் தற்போது உச்சத்தில் இருக்கிறது. கொரோனாவின் ஆரம்பத்தில் வெப்பநிலை அதிகமாக உள்ள ஆப்பிக்கக் கண்டத்தில் கொரோனா தாக்கம் குறைவாக இருக்கிறது என்ற கணிப்புகள் எல்லாம் வெளியாகியது. தற்போது ஆப்பிரிக்க கண்டத்திலும் கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்து இருக்கிறது.
ஆப்பிரிக்க கண்டத்தின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் கொரோனா தாக்கத்தினால் ஆப்பிரிக்கா முழுவதும் 19 லட்சம் மக்கள் உயிரிழக்க நேரிடும் என WHO தெரிவித்துள்ளது. பாதிப்பு ஆரம்பித்த இந்த ஆண்டில் உயிரிழப்பு 83 ஆயிரத்தில் இருந்து 19 லட்சமாகப் பதிவாகும் என WHO வின் ஆப்பிரிக்கத் தலைவர் மாட்சிடிசோ மொயட்டி குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், சுகாதாரத் துறைகள் தோல்வியைச் சந்திக்கும்போது பாதிப்புகள் 29 - 44 மில்லியன் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முழுமையாக இல்லை என்ற கருத்தில் WHO இந்தக் கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் வேகத்தில் முதல் கட்டத்தில் இருக்கும் பல ஆப்பிரிக்க நாடுகளில் சுகாதார அமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. பாதிப்புகள் அதிகமாகும்போது நிலைமை இன்னும் மோசமாகலாம் எனவும் ஆப்பிரிக்காவின் WHO தலைவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க கண்டத்தில் கிட்டத்தட்ட 54 நாடுகள் இருக்கின்றன. அவற்றில் தற்போதைய கொரோனா நிலவரம்.
நைஜீரியா – 3,526 கொரோனா பாதிப்பு, இறப்பு – 107
எத்தோப்பியா – 191 கொரோனா பாதிப்பு, இறப்பு – 4
எகிப்து – 7,981 கொரோனா பாதிப்பு, இறப்பு – 482
தான்சானியா – 480 கொரோனா பாதிப்பு, இறப்பு – 16
தென் ஆப்பிரிக்கா – 8,232 கொரோனா பாதிப்பு, இறப்பு – 161
கென்யா – 607 கொரோனா பாதிப்பு, இறப்பு – 29
உகாண்டா 101 கொரோனா பாதிப்பு
அல்கேரியா – 5,182 கொரோனா பாதிப்பு, இறப்பு – 483
சூடான் - 930 கொரோனா பாதிப்பு, இறப்பு – 52
மொராக்கோ – 5,548 கொரோனா பாதிப்பு, இறப்பு – 183
அங்கோலா – 36 கொரோனா பாதிப்பு, இறப்பு – 2
மொசாம்பி – 81 கொரோனா பாதிப்பு
கானா – 3,091 கொரோனா பாதிப்பு, இறப்பு – 18
மடகாஸ்கர் – 193 கொரோனா பாதிப்பு
கேமரூன் – 2,267 கொரோனா பாதிப்பு, இறப்பு – 108
புர்கினா பாசோ – 736 கொரோனா பாதிப்பு, இறப்பு – 48
சோமாலியா – 928 கொரோனா பாதிப்பு, இறப்பு – 44
மாலாவி – 43 கொரோனா பாதிப்பு, இறப்பு – 3
சாம்பியா – 153 கொரோனா பாதிப்பு, இறப்பு – 4
செனகல் – 1,492 கொரோனா பாதிப்பு, இறப்பு – 13
Chad- 253 கொரோனா பாதிப்பு, இறப்பு – 27
ஜிம்பாபே – 34 கொரோனா பாதிப்பு, இறப்பு – 4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout