ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா: இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதால் விபரீதம்
- IndiaGlitz, [Sunday,June 14 2020]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 19 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது என்பதும் இந்த 19 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 50 வயது பெண்மணி ஒருவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரனோ அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவருக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் இறந்த பெண்ணின் கொரோனா வைரஸ் சோதனை மறுநாள் வந்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து தெலுங்கானா மாநில சுகாதாரத் துறையினர் அந்த பெண்மணியின் குடும்பத்தினர் அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். இவ்வாறு 25 பேர் பரிசோதனை செய்ததில் அவர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அந்த குடும்பத்தினர் இந்த வீடு இருந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதித்த ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 பேருக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.