தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 44: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவால் பலியானோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக தீவிரமாக பரவி வருவது உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நேற்று 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்வு என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,244 ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் 44 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதித்த பேர் 797 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,344 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவிலேயே கொரோனா டெஸ்ட் அதிகம் எடுத்திருக்கும் மாநிலம் தமிழகம் என்றும், கொரோனா பரிசோதனை அதிகமாக இருப்பதால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகம் என்றும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும், கொரோனா பாதிப்பு தொடர்பாக எதனையும் தமிழக அரசு மறைக்கவே இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவை தேடிப் பிடிக்கும் சேஸிங் ஸ்ரேட்டஜியை தமிழக அரசு கடைபிடிக்கிறது என்றும், சென்னையில் மட்டும் 1,85,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், சரியான நேரத்தில் கொரோனா கண்டறியப்பட்டதால் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

More News

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடா? தமிழக அரசு அதிரடி முடிவு

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வந்தது என்பது தெரிந்ததே

காசி விவகாரம்: நாகர்கோவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

நாகர்கோவிலைச் சேர்ந்த காசியும் அவரது நண்பர்களும் பள்ளி மாணவிகள் முதல் குடும்பப் பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்வை சீரழித்த சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பி, சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டவர் திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல் 

வெளி நாட்டிலிருந்து தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி மலேசியாவில் இருந்து

100 வயது மூதாட்டியை கட்டிலோடு இழுத்து வங்கிக்கு சென்ற 60 வயது மகள்: அதிர்ச்சி வீடியோ

100 வயது மூதாட்டியை அவரது 60 வயது மகள் கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'விஸ்வாசம்' பட தயாரிப்பாளருக்கு கிடைத்த புதிய பதவி

கமல்ஹாசன் நடித்த 'மூன்றாம் பிறை'என்ற படம் தொடங்கி தமிழில் பல திரைப்படங்களை தயாரித்தவர் சத்யஜோதி தியாகராஜன். இவர் சமீபத்தில் தயாரித்த அஜித் நடித்த 'விஸ்வாசம்' சூப்பர் ஹிட்டாகி பெரும் வசூலை வாரி குவித்தது.