என்னுடைய 18 ஆண்டு கால காதல்.. தமன்னாவின் நெகிழ்ச்சியான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை தமன்னா திரையுலகத்திற்கு வந்து 18 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் எனது முதல் காதலான சினிமாவின் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
நடிகை தமன்னா கடந்த 2005ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நிலையில் தற்போது 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’டீன் ஏஜ் கனவுகள் முதல் அந்த கனவு நனவானது வரை, துன்பத்தில் இருக்கும் பெண், பக்கத்து வீட்டுப் பெண், மோசமான பவுன்சர், ஒரு பயமற்ற புலனாய்வாளர் என என்னுடைய கேரக்டர்கள் அற்புதமாக பயணம் செய்தன. 18 வருடங்கள் என்னுடைய முதல் காதலான சினிமாவில் நிறைவு செய்துள்ளேன்.
சமீபத்தில் வெளியான ’ஆக்ரி சா’ச் என்ற வெப் தொடரில் எனக்கு அனன்யா என்ற காவல்துறை அதிகாரி கேரக்டர் கிடைத்துள்ளது. இந்த கேரக்டர் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆனால் நான் அந்த சவாலை இரு கரங்களுடன் வரவேற்றேன். ஒவ்வொரு உணர்ச்சியையும் இந்த கேரக்டரில் செலுத்தி அதற்கு முழுமையான உழைப்பை கொட்டினேன். எனது முயற்சியை நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த அற்புதமான 18 வருட நினைவுகளை நினைவு கூர சிறிது நேரம் கிடைத்தது. இதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இந்த கனவு சவாரியில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றி என்று தெரிவித்துள்ளார். தமன்னாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை தமன்னா 18 ஆண்டுகள் திரை உலகை நிறைவு செய்ததை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை காஜல் அகர்வால் தனது பதிவில் ’18 ஆண்டுகள் என்பது மிகப்பெரிய சாதனை, உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments