ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்தால் இவ்வளவு உயிரிழப்பா? ஒட்டுமொத்த அமெரிக்காவையே கலங்க வைக்கும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் அதிபர் தேலுக்கான தேர்தல் தேதி நாளை என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அந்நாட்டு தேர்தல் விதிமுறையின்படி பெரும்பாலான மக்கள் அதற்கு முன்னதாகவே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து விட்டனர். இந்நிலையில் தற்போதுவரை வெளிவந்த கருத்துக் கணிப்பில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. அந்நாட்டின் இளைஞர்கள் மற்றும் நகரப்பகுதியைச் சேர்ந்த மக்களின் வாக்குகளை இவர் குவித்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கிராமங்களில் வசிக்கும் மக்கள், அதுமட்டுமல்லாது பெரு நிறுவனங்கள், முதலாளிகள், தொழிலதிபர்கள் மற்றும் பழமை கருத்துகளைக் கொண்டோர் மத்தியில் டொனால்ட் ட்ரம்ப் அதிகம் மதிக்கப்பட்டு வருகிறார். இந்தக் கருத்துக் கணிப்புகளை வைத்துப் பார்த்தால் ஜோ பிடன் முன்னலையில் இருக்கிறார் என்றே தெரிகிறது. ஆனால் நாளை நடக்கவிருக்கும் தேர்தலில் பெரும்பாலும் ட்ரம்ப்பின் வாக்காளர்களே தங்களது ஒட்டுகளைபதிவு செய்ய உள்ளனர். இந்த ஓட்டுக்கள்தான் முதலில் எண்ணப்படும். எனவே முதற்கட்ட வெற்றி வாய்ப்பு ட்ரம்ப்புக்கே கிடைக்கும் ஆனால் தொடர்ந்து அதன் நிலைமை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை முறைப்படி ஒழுங்குப் படுத்தவில்லை. இதனால் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்ற தகவல் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் நடத்திய ஒரு ஆய்வில் ட்ரம்ப் கடந்த ஜுன் 20 ஆம் தேதி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை 18 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை வெவ்வேறு மாகாணங்களில் நடத்தி இருக்கிறார்.
இந்தப் பிரச்சாரக் கூட்டங்களினால் இதுவரை 30 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அதோடு 700 பேர் இந்த பாதிப்பினால் உயிரிழந்து உள்ளனர். இந்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்ஸ் பல்கலைக் கழகத்தின் அறிஞர்களும் பரிந்துரைத்து உள்ளனர். இதனால் ட்ரம்ப் மீதான அதிருப்தி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த தரவுகள் நாளை நடக்கவிருக்கும் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout