18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: என்னென்ன சாத்தியம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,. இந்த தீர்ப்பால் என்னென்ன நடக்க சாத்தியம் என்பதை தற்போது பார்ப்போம்.
*தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்தால் சட்டமன்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 214ஆக மாறும். ஆட்சி அமைக்க 108 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் 109 பேர் இருப்பதால் ஆட்சிக்க்கு ஆபத்து இல்லை.
* தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் சட்டமன்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 232 ஆக மாறும். ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் 109 பேர் மட்டுமே இருப்பதால் ஆட்சி கவிழும் வாய்ப்பு உள்ளது.
* தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மேல்முறையீடு செய்து, தீர்ப்புக்கு இடைக்கால தடை பெற்றால், தற்போதைய நிலையே தொடரும்.
* தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வெளிவந்தால் 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அப்போதும் இப்போதைய நிலையே தொடரும்.
* தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்து, முதல்வரால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாவிட்டால் தினகரன் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.
* தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்து இரு தரப்பினர்களும் தீர்ப்பை ஏற்று கொண்டால் விரைவில் 18 தொகுதி மற்றும் காலியாக இருக்கும் 2 தொகுதிகள் என மொத்தாம் 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும்.
மேற்கண்ட வாய்ப்பு தவிர இன்னும் ஒருசில வாய்ப்புகள் இருப்பதால் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com