சென்னையில் காலை 8 மணிக்குள் 18 பேர் பலி: கொரோனாவின் கோரத்தாண்டவம்
- IndiaGlitz, [Tuesday,June 30 2020]
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தினந்தோறும் ஆயிரத்துக்கு உள்ளானவர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனாவால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி விட்டது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3949 என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தலைநகர் சென்னையில் கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து தாண்டி விட்டது என்பது அதிர்ச்சிகரமான தகவல் ஆகும். இந்த நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது மட்டுமின்றி பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை மட்டுமே சென்னையில் 18 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நான்கு பேர்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று பேர்களும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒன்பது பேர்களும், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாளை முதல் மீண்டும் ஒரு மாதத்திற்கு தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.