1700 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோணா தொற்று... திணறும் சீனா.
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீன மக்கள் முடங்கியுள்ளனர். இதுவரை 1500-க்கும் அதிகமானவர்கள் உயிழந்துள்ளனர். 60 ஆயிரத்தும் அதிகமானவர்கள் இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மருத்துவமனைகளில் இருந்து 6,000-த்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில்,சீனாவில் 1,700 மருத்துவப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வெளியான தகவல், சீன மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. மருத்துவ ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதுவே மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படக் காரணம் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout