வாலிபர் அனுப்பிய ஆபாச மெசேஜ்: அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட 12ஆம் வகுப்பு மாணவி!

  • IndiaGlitz, [Saturday,August 01 2020]

வாலிபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி காதல் டார்ச்சர் செய்ததால் அதிர்ச்சி அடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் என்ற பகுதியில் 17 வயது இளம்பெண் ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரை அதே பகுதியில் உள்ள ஒரு இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. தான் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்து மேல்படிப்பு படிக்க விரும்புவதாகவும், எனவே தனக்கு தற்போது காதல் செய்யும் ஐடியா இல்லை என்றும் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அந்தப் பெண் கேட்டுள்ளார்

ஆனால் அந்த பெண்ணை தொடர்ந்து விடாமல் டார்ச்சர் செய்த வாலிபர் அந்த பெண்ணின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி உள்ளதாக தெரிகிறது. அது மட்டுமின்றி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென வீட்டில் புகுந்து தன்னை காதலிக்க விட்டால் குடும்பத்தையே கொலை செய்வதாக மிரட்டி உள்ளார்

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் தன்னால் தனது குடும்பத்தினருக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு விட்டார். வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீடு திரும்பியவுடன் தங்களது மகள் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்

இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த போது வாலிபர் ஒருவர் காதல் டார்ச்சர் கொடுத்ததும், தொடர்ச்சியாக ஆபாச மெசேஜ்களை அனுப்பியதும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்ச்சியாக ஆபாச மெசேஜ் அனுப்பி, ஒருதலைக் காதலால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவி 12-ம் வகுப்பில் 74 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்பது அவருடைய மரணத்திற்குப் பின் தெரிய வந்துள்ளது என்பதை சோகத்திற்கு உரிய ஒன்றாகும்

More News

இறந்த கணவரின் உயிர்த்தடத்தில் ரத்தம்: மனைவி செய்த செயலால் அதிர்ந்த போலீசார்!

மதுரை அருகே திடீரென வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் அவரது மனைவி செய்த செயலால் தான் அவர் இறந்தார் என்ற தகவலால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் 

கார்த்தியின் 'கைதி' திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்!

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியான திரைப்படம் 'கைதி'.

தொழிலதிபருடன் லிவிங்டுகெதர் ரிலேஷனா? பிக்பாஸ் ஜூலி விளக்கம்

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, 'ஜல்லிக்கட்டு' போராட்டத்தின்போது ஒட்டுமொத்த தமிழர்களிடையே பெற்ற பெரும் புகழை இழந்தார் என்றே சொல்ல வேண்டும்

17 மாவட்டங்களில் ரூ.247 கோடி மதிப்பிலான நீர்வள ஆதாரப் பணிகளைத் தொடங்கிவைத்த தமிழக முதல்வர்!!!

தமிழகப் பொதுப்பணித்துறையின் கீழ் பல்வேறு நீர்வள ஆதாரப்பணித் திட்டங்களுக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் உதவியால் பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி: குவியும் வாழ்த்துக்கள்!

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கஷ்டப்படும்போது மக்களுக்கு உதவி செய்வதில் வட இந்தியாவில் ஒரு சோனு சூட் என்றால் தென்னிந்தியாவில் ராகவா லாரன்ஸ் என்று சொல்லலாம்.