பிரபலங்களே வியக்கும் டி.குகேஷ்? 17 வயதில் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
சதுரங்க விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு 5 முறை சாம்பியன் ஷிப் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் விளையாட்டு வீரர் எனும் பெருமையைத் தட்டிச்சென்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த 17 வயதேயான குகேஷ். இவருக்கு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்களுள் ஒருவரான டி.குகேஷ் சென்னையில் வசித்து வருகிறார். செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் விளையாட்டு வீரரான விஸ்வநாதன் ஆனந்தை ரோல் மாடலாகக் கொண்டு விளையாடி வரும் நிலையில் கடந்த 2019 இல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். தொடர்ந்து 16 வயதில் உலக சாம்பியனை வீழ்த்தி பெரிய சாதனை படைத்தார்.
இந்நிலையில் தற்போது உலக செஸ் வீரர் தரவரிசையில் 2755.5 புள்ளிகளைப்பெற்று உலகத் தரவரிசையில் டாப் 10 பட்டியலில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் இவர் 2754.0 புள்ளிகளுடன் தனக்கு முன்னிருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி முதல் முறையாக இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் விளையாட்டு வீரர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார்.
மேலும் உலகத் தரவரிசை பட்டியலில் இளம் வயதில் டாப் 10 பட்டியலுக்குள் இணைந்திருக்கும் முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.
FIDE உலகக் கோப்பை சதுரங்கப் போட்டிகள் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிவரும் குகேஷ் இரண்டு சுற்றுகளில் வெற்றிப்பெற்று 2755.5 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் புள்ளிகள் அடுத்த தரவரிசைப் பட்டியல் வரும்வரை தொடருமானால் கடந்த 1986 க்கு பிறகு விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு வீரராக இருக்கும் ஒரே வீரர் என்ற பெருமையும் குகேஷ்க்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘வாழ்த்துகள் கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ். முதல் முறையாக உலகின் முதல் 10 தரவரிசையில் நுழைந்த உங்கள் அசாத்திய சாதனையில் உங்களது உறுதியும் திறமையும் உங்களை செஸ் விளையாட்டில் உயர்மட்ட நிலைக்கு உயர்த்தியுள்ளது. உங்கள் சாதனை எல்லா இடங்களிலும் உள்ள இளம் திறமையாளர்களுக்கு ஒரு உத்வேகமாகவும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணமாகவும் உள்ளது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
17 வயதில் உலக செஸ் தரவரிசையில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறி இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் விளையாட்டு வீரர் என்ற பெருமையைத் தட்டிச்சென்றிருக்கும் குகேஷின் இந்த சாதனை பல இளம் வீரர்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments