புளூவேல் அட்மின் கைது! முடங்குமா ஆபத்தான விளையாட்டு?

  • IndiaGlitz, [Thursday,August 31 2017]

உலகையே ஆட்டிப்படைத்து வந்த ஆன்லைன் விளையாட்டான புளுவேல் விளையாட்டின் அட்மின் ரஷ்ய போலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் ஒரு 17வயது மாணவி என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்'
புளுவேல் விளையாட்டின் கொடூரமான டாஸ்க்குகளை கொடுத்து கடைசியில் தற்கொலைக்கு தூண்டும் அட்மின் பணியை செய்து கொண்டிருந்தது இந்த 17 வயது சிறுமிதான் என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ்குகளை செய்யவில்லை என்றால் உறவினர்கள் அல்லது குடும்பத்தினர்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளதால் தான் இந்த விளையாட்டை விளையாடிய பலர் கொடூர டாஸ்க்குகளுக்கு கட்டுப்பட்டுள்ளார்கள் என்றும் கடைசியில் தற்கொலைக்கும் துணிந்துள்ளார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிலிப் புடிகின் என்ற இந்த 17 வயது சைக்காலஜி மாணவி ஆரம்பத்தில் புளுவேல் விளையாட்டை விளையாடியவர் என்றும் ஆனால் 50வது டாஸ்க் ஆன தற்கொலை டாஸ்க்குக்கு இவர் அடிபணியாததால் இவர் இந்த விளையாட்டின் அட்மின் ஆக மாற்றப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் போலீசாரின் விசாரணைக்கு பின்னர் இந்த மாணவிக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்
17 வயது மாணவி தவிர மேலும் ஒரு இளைஞர் இதே காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இனிமேலாவது இந்த விளையாட்டு முடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

முதல்வரை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அதிரடி அரசியல் கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

ஓட்டுனர் உரிமம் காணாமல் போய்விட்டால் விண்ணப்பிக்க எளிய வழி

நாளை முதல் ஓட்டுனர் உரிமம் ஒரிஜினலை கையில் வைத்து கொண்டுதான் வாகனங்களை ஓட்ட முடியும்.

அஜித்தின் விவேகம்: தமிழகம், இந்தியா, உலக வசூல் விபரம்

தல அஜித் நடித்த 'விவேகம்' ரிலீஸ் ஆகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் தற்போது ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

எவ்வளவோ விளையாட்டுகள் உள்ளது. புளூவேலில் ஏன் சிக்க வேண்டும்? காவல்துறை ஆணையர் அறிவுரை

உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று புளுவேல் என்ற எமனிடம் சிக்கி அதிலிருந்து வெளியே வரவிடாமல் தவிக்கின்றனர். இதன் உச்சகட்டமாக பலர் உயிரையே மாய்த்து கொள்வதால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது...

'விவேகம்' காஜல் அகர்வாலின் 'மோர்ஸ் கோட்' குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

கோலிவுட் திரையுலகின் பல திரைப்படங்கள் நாம் இதுவரை கேள்விப்படாத பல விஷயங்களை நமக்கு கற்று கொடுத்துள்ளது. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்' சுனாமியையும், ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாவது அறிவு' போதிதர்மரையும், துப்பாக்கி திரைப்படம் ஸ்லீப்பர் செல்லையும் நமக்கு கற்று கொடுத்தது...