"நான் சிக்கன் சாப்பிட்டேன் கொரோனா வந்துவிட்டது" வாட்சப்பில் வதந்தி பரப்பிய இளைஞர் கைது..!

  • IndiaGlitz, [Thursday,February 27 2020]

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கறிக் கடையில் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியாததால், சிக்கன் மூலம் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே நெய்வேலியில் உள்ள கடை ஒன்றில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட இளைஞர் ஒருவர், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது.

இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்து அதிர்ந்துபோன கடை உரிமையாளர் பக்ருதீன் அலி முகமது என்பவர், நெய்வேலி தெர்மல் காவல்நிலையத்தில் இளைஞர் மீது புகார் அளித்தார்.

புகாரில் தான் 20 ஆண்டுகளாக கறிக்கடை நடத்தி வருவதாகவும், தனது கடையில் தினம் சிக்கன் வாங்கி சாப்பிட்ட 17 வயது இளைஞர் ஒருவர், வாங்கிய சிக்கனுக்கு பணம் கொடுக்கமுடியாததால் தனது கடையை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகவும் புகாரில் தெரிவித்தார். புகாரின் பெயரில் இளைஞர் மீது தவறான தகவலை பரப்புதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர். அவருக்கு 17 வயது ஆவதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.