17 வயது சிறுவனுடன் மாயமான 26 வயது பெண்: மதுரையில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
மதுரையில் 17 வயது சிறுவன் ஒருவன், 26 வயது பெண்ணுடன் மயமாகி விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 26 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகியதாலும் சிறுவன் என்பதாலும் பெற்றோர்களுக்கு எந்தவித சந்தேகமும் வரவில்லை.
இந்த நிலையில் திடீரென 17 வயது சிறுவனும் இளம்பெண்ணும் மாயமாகி விட்டத அறிந்து இருவரின் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் நகர் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் தான் இருவரும் வயசு வித்தியாசம் பார்க்காமல் பொருந்தாக் காதலில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது
இந்த நிலையில் இது குறித்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனையும் சிறுவனுடன் சென்ற இளம் பெண்ணையும் தேடி வருகின்றனர். 17 வயது சிறுவன் 26 வயது பெண்ணுடன் காதல் ஏற்பட்டு திடீரென மாயமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout