close
Choose your channels

'லியோ' படத்தில் இத்தனை தீம் டிராக்குகளா? அனிருத்தை செம்மையாக வேலை வாங்கிய லோகேஷ்..!

Monday, August 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் உலகநாயகன் கமல்ஹாசன், சியான் விக்ரம், மற்றும் தனுஷ் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ‘லியோ’ படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் 17 தீம் டிராக்குகள் கம்போஸ் செய்திருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தீம் டிராக்கும் படத்தில் அட்டகாசமாக இருக்கும் என்றும் இந்த படத்திற்காக அனிருத்தை இயக்குனர் லோகேஷ் செம்மையாக வேலை வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போது வெளியான பிளடி ஸ்வீட் ப்ரோமோ வீடியோவில் உள்ள காட்சிகள் இந்த படத்தின் மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், படம் பார்க்கும்போது அவை தெளிவாக தெரியும் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தின் கதை தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் கதைக்கு நேர் எதிராக இருக்கும் என்றும் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் ஒரு எதிர்பாராத படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment