கிச்சடியில் போதை மருந்து கலந்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை!
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 பள்ளி மாணவிகளுக்கு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்கள் பயிலும் பள்ளிகளின் மேலாளர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் முசாபூர் பகுதியில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மேலாளர்கள் இரண்டுபேர் தத்தமது பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவிகளிடம் செய்முறைத் தேர்வு இருப்பதாகப் பொய்ச்சொல்லி 17 மாணவிகளை வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அந்த மாணவிகளுடன் ஆசிரியர்கள் யாரும் உடன்செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளியே அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளுக்கு மேலாளர்கள் இருவரும் கிச்சடியில் போதை மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். இதையடுத்து மயங்கிய மாணவிகளை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததோடு இதை வெளியே சொன்னால் பரிட்சையில் தோல்விதான் கிடைக்கும். மேலும் உங்களது குடும்பத்தையே கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்துபோன அந்த மாணவிகள் அடுத்த நாள் பள்ளிகளுக்குச் செல்லாமல் தவிர்த்து இருக்கின்றனர். இதையடுத்து ஒரு மாணவியின் தந்தை புகார் கொடுத்ததும் தற்போது 17 நாட்களைக் கடந்து இந்த விஷயம் பூதாகரமாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com