படகு கவிழ்ந்து பயங்கர விபத்து: 17 பேர் பலி,
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் நேற்று படகில் 40 பேர் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென படகு கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 17 பேர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் காணாமல் போன மற்றவர்களை மீட்புப்படையினர் தேடி வருகின்றனர்
நேற்று மாலை ஆந்திர மாநிலத்தில் உள்ள தேவிப்பட்டணம் என்ற பகுதியில் இருந்து மாடப்பள்ளிக்கு படகு ஒன்றில் 40 பேர் பயணம் செய்தனர். அப்போது திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் அவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் படகில் இருந்த 7 ஆண்கள் மட்டும் நீந்தி கரைசேர்ந்தனர். மீதமுள்ள 33 பேர்களில் 17 பேர்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றவர்களின் நிலைமை என்ன என்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு உடனே விபத்து நடந்த இடத்திற்கு வந்து, மீட்புப்பணியை துரிதப்படுத்தினார். காணாமல் போனவர்களை மீட்க உடனடியாக முதல்வரின் உத்தரவின்படி ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை காணாமல் போனவர்கள் குறித்த தகவல் தெரியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout