'விஸ்வரூபம் 2' படத்திற்கு 17 வெட்டுக்கள்: சென்சார் அதிரடி

  • IndiaGlitz, [Saturday,May 05 2018]

உலக நாயகன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பின் சென்சார் ஏற்கனவே முடிந்து, இந்த படம் 'யூஏ' சான்றிதழ் பெற்றுள்ளது என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி பதிப்பின் சென்சார் தற்போது முடிந்துள்ளது. இந்தி சென்சாரில் இந்த படத்திற்கு 17 வெட்டுக்கள் இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. 17 வெட்டுக்களுடன் யூ சான்றிதழ் வழங்க சென்சார் உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும், ஆனால் வேறு சில உறுப்பினர்கள் இந்த படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் தரவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் மற்றும் மத சம்பந்தமான காட்சிகள் தான் வெட்டப்பட்ட 17 காட்சிகள் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து இயக்கி வரும் இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.