16-வது தமிழக சட்டப்பேரவை...! அமைச்சர்கள் இன்று பதவியேற்பு...!

தமிழக முதல்வரான ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டசபை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

சட்டசபையில் முதல்வராகிய ஸ்டாலின் அவர்கள், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று கூறி எம்எல்ஏ-வாக பதவியேற்ற போது, அனைவரும் கரகோஷத்தை எழுப்பி வரவேற்பு தந்தனர்.

தமிழகத்தில் 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்று முடிந்தது. இந்த அரங்கிற்கு வருகை புரிந்த முதல்வருக்கு சட்டசபை செயலர், பூங்கொத்து தந்து வரவேற்றார்.

சட்டசபை அமைச்சர்களுக்கு தற்காலிக சபாநாயகரான கு.பிச்சாண்டி பதவியேற்பு செய்து வைத்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்கட்சியாக 140-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்றது திராவிட முன்னேற்ற கழகம். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், முதலில் எம்எல்ஏ-வாக பதவியேற்றார். இவருக்கு சபாநாயகர் பிச்சாண்டி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்க, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று கூறி பதவியேற்றார் முதல்வர் அவர்கள்.

இவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், அமைச்சர்கள் , நேற்று எதிர்க்கட்சித்தலைவராக பதவியேற்றுக்கொண்ட அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்கள். இதையடுத்து அகரவரிசைப்படி அமைச்சர்கள் உளமாற உறுதியளிக்கிறேன் என்று கூறி பதவியேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் சபாநாயகர்...?

சபாநாயகர் பதவிக்கு திமுக சார்பாக அப்பாவு அவர்களும், துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டி அவர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களை எதிர்த்து போட்டியிட யாரும் மனு தாக்கல் செய்யாததால், நாளை நடைபெறவிருக்கக்கூடிய கூட்டத்தில் இவர்களே சபாநாயகராகவும், துணை சபாநாயகராகவும் பதவியேற்கவுள்ளனர்.