ஒவ்வொரு நாளும் உச்சமடையும் கொரோனா பாதிப்பு: என்ன ஆகும் தமிழகம்?
- IndiaGlitz, [Tuesday,June 09 2020]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருவதால் தமிழகம், குறிப்பாக சென்னை என்ன ஆகும் என்பதை நினைத்தாலே பெரும் அச்சமாக உள்ளது
தமிழகத்தில் நேற்று 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உச்சத்தை அடைந்த நிலையில் இன்று புதிய உச்சமாக 1685 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சற்றுமுன் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 34,914 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1685 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1243 பேர்கள் என்பதும், இதனால் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு 24,545ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இன்று கொரோனாவில் இருந்து 798 பேர் குணமாகியுள்ளனர் என்பதும், இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 18325 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கொரோனாவுக்கு 21 பேர்கள் பலியாகியுள்ளதால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 307ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் உயிரிழப்பிலும் உச்சமடைந்துள்ளது
மேலும் இன்று 13219 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் இதுவரை மொத்தம் 621,171 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது