அரியலூரில் ஒரே நாளில் 168 கொரோனா தொற்று: கோயம்பேடு கொடுத்த பரிசு!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரியலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி வரை ஓரிருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தமிழகத்திலேயே கடைசி இடத்தில் இருந்தது. இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாகி நேற்று வரை 34 பேர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் அம்மாவட்ட மக்களுக்கு கடும் அதிர்ச்சியாக உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 34 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், புதிதாக 168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அம்மாவட்டத்தில் மொத்தம் 202 பேர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,.
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்திற்கு கோயம்பேடு கொடுத்த கொரோனா பரிசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments