ஓடும் ரயிலில் 167 பயணிகள் திடீர் மாயம்: அதிகாரிகள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
மூன்றாம் ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. அதன்படி மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இருக்கும் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சிறப்பு ரயில் ஒன்று கடந்த புதன்கிழமை இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயிலில் 1340 பயணிகள் பயணம் செய்தனர். இந்த சிறப்பு ரயில் கடந்த வெள்ளிக்கிழமை ஹரித்துவார் வந்தபோது பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக பயணிகளை எண்ணியபோது 1173 பயணிகள் மட்டுமே இருந்தனர். 1340 பயணிகள் சூரத்தில் இருந்து கிளம்பிய நிலையில் ஹரித்துவாரில் 1173 பயணிகள் மட்டுமே இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீதமுள்ள 167 பயணிகள் என்ன ஆனார்கள் என்பது மர்மமாக உள்ளது
ஹரித்துவாரில் செய்யப்படும் கொரோனா சோதனைக்கு பயந்து இடையில் 167 பேர் இறங்கி தப்பி ஓடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனை அடுத்து மாயமான பயணிகள் என்ன ஆனார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரயில்வேத்துறை மற்றும் ஹரித்துவார் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்த 167 பயணிகள் திடீரென மாயமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments