10ஆம் வகுப்பு தேர்வு: 165 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத கொடுமை!
- IndiaGlitz, [Sunday,April 28 2019]
இன்று தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95%க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தை போலவே நேற்று உத்தரபிரதேச மாநிலத்திலும் 10ஆம் வகுப்பு மற்றும் இண்டர்மீடியட் என்று கூறப்படும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் இண்டர்மீடியட் தேர்வில் மிகக்குறைந்த மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக அம்மாநிலத்தில் உள்ள 165 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இதில் 50 அரசுப்பள்ளிகள், ஐந்து அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 84 தனியார் பள்ளிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 388 பள்ளிகளில் 20%க்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் உபி உள்ளிட்ட வடமாநிலங்களில் மாணவர்கள் காப்பியடித்தே தேர்ச்சி பெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர்களை காப்பியடிக்க விடாமல் கடுமையாக சோதனை செய்யப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் சுற்றி மாணவர்கள் காப்பியடிக்க முடியாமல் இருந்ததாலே தேர்வு முடிவுகள் இவ்வளவு மோசமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.