16 வயது தலித் இளைஞர் உயிரோடு எரித்து கொலை! காதல் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பஞ்சாப் மாநிலத்தில் 16 வயது தலித் இளைஞர் ஒருவர் தூணில் கட்டி வைக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மூன்று பேர்கள் போஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்ப்ரீத்சிங் என்ற இளைஞரை திடீரென அவரது வீட்டிலிருந்து மூன்று தூக்கி சென்றனர். அதன் பின்னர் ஒரு ரகசிய இடத்தில் உள்ள ஒரு வீட்டின் தூணில் ஜஸ்ப்ரீத்சிங்கை கட்டிப் போட்டு பின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளனர்
இதுகுறித்து ஜஸ்ப்ரீத்சிங் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கு காரணமான மூன்று பேர்களை கைது செய்தனர் . இதுகுறித்து நடந்த விசாரணையில் கொலை செய்த மூவரில் ஒருவரின் தங்கையை ஜஸ்பிரித் சிங்கின் சகோதரர் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடி விட்டதாகவும், அவர்கள் வேறொரு ஊரில் தங்கி வாழ்ந்து கொண்டிருப்பதாகவும்,அந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் கூறப்படுகிறது
திருமணம் செய்த இருவரும் மீண்டும் ஊருக்குள் வந்தால் இருவரையும் கொலை செய்ய காத்திருந்த இந்த கும்பல், கடந்த இரண்டரை ஆண்டுகளாக வராததால் அந்த ஆத்திரத்தில் அவருடைய சகோதரர் ஜஸ்ப்ரீத்சிங்கை கொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout