16 வயது சிறுமிக்கு ஆபாச படம் போட்டுக் காட்டிய பெண் பாய்பிரண்டுடன் கைது

புனே அருகே ஒரு பெண் தனது 16 வயது மகளை தனது உறவினர் பெண் வீட்டில் ஊரடங்கு நேரத்தில் விட்டு சென்று உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் விட்டுச்சென்ற அந்த பெண் சமீபத்தில் பக்ரீத் விடுமுறையில் தனது மகளை பார்க்க வந்ததாக தெரிகிறது. அப்போது தாயிடம் அந்த 16 வயது சிறுமி திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறினார்.

தனக்கு அந்த வீட்டிலுள்ள பெண்ணும் அவருடைய பாய்பிரண்டும் சேர்ந்து ஆபாச படத்தை வலுக்கட்டாயமாக காட்டியதாக அவர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் சிறுமிக்கு ஆபாச படம் போட்டுக் காட்டிய பெண்ணையும் அவரது பாய்பிரண்டையும் கைது செய்தனர். அதன் பின் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

16 வயது சிறுமிக்கு ஆபாச படம் போட்டுக் காட்டிய பெண் ஒருவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.