பைக் விபத்தில் பலியான 16 வயது சிறுவன்: பெற்றோர் மீது வழக்கு
Send us your feedback to audioarticles@vaarta.com
18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்ட தடை என காவல்துறை எச்சரித்து வந்தும், சிறுவர்கள் பைக் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த. சென்னையில் 16 வயது சிறுவன் பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி அந்த சிறுவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனப்பாக்கத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் ரோஹித் ஆசை ஆசையாய் தனது பெற்றோரிடம் புத்தம் புது மாடல் பைக்கை கேட்க, ஆசை மகனின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் வகையில் புது பைக்கை அவரது பெற்றோர் வெங்கடேசன் - மீனா தம்பதிகள் வாங்கி கொடுத்துள்ளனர்
இந்த நிலையில் ரோஹித் நேற்று சென்னை அண்ணாநகர் பகுதியில் பைக்கில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற பாபு என்ற சிறுவன் மீது மோதியுள்ளார். இதில் பாபு, ரோஹித் இருவருமே உயிரிழந்தனர். இன்னொரு சிறுவன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் மீனா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை விளைவித்தல், அதிவேக பயணம், மோட்டர் வாகனச் சட்டம் 180 உள்ளிட்ட 6 பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
18 வயது முடிந்த பின்னர் முறையாக லைசென்ஸ் எடுத்த பின்னரே இருசக்கர வாகனங்கள் ஓட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினர் அடிக்கடி கூறியும் ஒருசில பெற்றோர்கள் 18 வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு பைக் வாங்கி கொடுத்து பெற்ற பிள்ளையும் இழப்பது மட்டுமின்றி குற்றவாளி கூண்டிலும் நிற்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இனிமேலாவது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பைக் வாங்கி கொடுக்கும்முன் இதனை உணர வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com