பைக் விபத்தில் பலியான 16 வயது சிறுவன்: பெற்றோர் மீது வழக்கு

  • IndiaGlitz, [Friday,April 06 2018]

18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்ட தடை என காவல்துறை எச்சரித்து வந்தும், சிறுவர்கள் பைக் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த. சென்னையில் 16 வயது சிறுவன் பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி அந்த சிறுவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனப்பாக்கத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் ரோஹித் ஆசை ஆசையாய் தனது பெற்றோரிடம் புத்தம் புது மாடல் பைக்கை கேட்க, ஆசை மகனின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் வகையில் புது பைக்கை அவரது பெற்றோர் வெங்கடேசன் - மீனா தம்பதிகள் வாங்கி கொடுத்துள்ளனர்

இந்த நிலையில் ரோஹித் நேற்று சென்னை அண்ணாநகர் பகுதியில் பைக்கில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற பாபு என்ற சிறுவன் மீது மோதியுள்ளார். இதில் பாபு, ரோஹித் இருவருமே உயிரிழந்தனர். இன்னொரு சிறுவன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் மீனா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை விளைவித்தல், அதிவேக பயணம், மோட்டர் வாகனச் சட்டம் 180 உள்ளிட்ட 6 பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

18 வயது முடிந்த பின்னர் முறையாக லைசென்ஸ் எடுத்த பின்னரே இருசக்கர வாகனங்கள் ஓட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினர் அடிக்கடி கூறியும் ஒருசில பெற்றோர்கள் 18 வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு பைக் வாங்கி கொடுத்து பெற்ற பிள்ளையும் இழப்பது மட்டுமின்றி குற்றவாளி கூண்டிலும் நிற்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இனிமேலாவது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பைக் வாங்கி கொடுக்கும்முன் இதனை உணர வேண்டும்

More News

'காலா'வை குறிவைத்து காய் நகர்த்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

ஏப்ரல் 27ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் உறுதியில்லை என்பதால் இந்த படத்தின் வியாபாரமும் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் காலாவை குறிவைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் காய் நகர்த்த தொடங்கிவிட்டன.

காமன்வெல்த் போட்டி: 2வது தங்கமங்கைக்கு சேவாக் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் இந்தியாவின் மீராபாய் முதல் தங்கத்தையும், குருராஜா முதல் வெள்ளி பதக்கத்தையும் பெற்று தந்த நிலையில் இன்று இந்தியாவுக்க்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

மெர்க்குரி ரிலீஸ் குறித்து கார்த்திக் சுப்புராஜின் குழப்ப விளக்கம்

தமிழ்ப்பதிப்பு மட்டும் வெளிவராது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாகவும், வசனமே இல்லாத 'மெர்க்குரி' படத்திற்கு தமிழ் மொழி பதிப்பு என்ற ஒன்று உண்டா?

கோலிவுட் ஸ்டிரைக் எதிரொலி: ஆடு மேய்க்க போன பிரபல தமிழ் நடிகை

கோலிவுட் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் இருப்பதால் பெரிய நடிகர், நடிகைகள் முதல் சின்ன நடிகர், நடிகைகள் வரை வீட்டில் ஓய்வு எடுத்தும், வெளிநாட்டு, சுற்றுலாவுக்கும் சென்று வருகின்றனர்.

இந்திய சினிமாவில் விஜய் தான் பெஸ்ட்: சிவகார்த்திகேயன் கூறும் காரணம் என்ன தெரியுமா?

குறுகிய காலத்தில் மக்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி கொண்ட சிவகார்த்திகேயன்