டிக்டாக் வீடியோவுக்கு அடிமையாகி உயிரை இழந்த சிறுவன்!

  • IndiaGlitz, [Tuesday,August 20 2019]

டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து லைக்ஸ்களை குவிக்க பலர் ரிஸ்க் எடுப்பது தெரிந்ததே. அந்த வகையில் சிலசமயம் உயிரையும் இழக்கும் அபாயமும் ஏற்படும். அந்த வகையில் டிக்டாக்கில் பதிவு செய்ய ரயில்முன் வீடியோ எடுத்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மேற்குவங்கத்தில் நடைபெற்றுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த முகமது நூர் அன்சாரி, மற்றும் சவுக்கத் அலாம் ஆகிய இருவரும் ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். ரயில் தண்டவாளத்தில் ரயில் அருகே வரும் வரை தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவு செய்து லைக்ஸ்களை குவிப்பது இந்த இருவரின் வழக்கமாக இருந்தது நேற்று ஞாயிறு என்பதால் வழக்கம்போல் ரயில்வே தண்டவாளத்தில் ரயில்வரும்போது டிக்டாக் வீடியோ எடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்து கொண்டிருந்தபோது திடீரென உள்ளூர் ரயில் ஒன்று பின்னால் வந்துள்ளது. இதனை கவனிக்காமல் வீடியோ எடுத்து கொண்டிருந்த நூர் அன்சாரி சம்பவ இடத்திலேயே உடல்சிதறி மரணம் அடைந்தார். சவுக்கத் அலாமுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் போல் டிக்டாக்கிற்காக வீடியோ எடுக்க சென்றான். ஆனால் இன்று பிணமாகதான் வந்தான் நூர் அன்சாரியின் உறவினர்கள் கதறிய அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவுக்கு இருந்தது. டிக்டாக் வீடியோ எடுக்க ரயில் தண்டவாளம் போன்ற ரிஸ்கான இடத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.
 

More News

அமீர்கான் படத்தின் விஜய்சேதுபதியின் கேரக்டர் இதுதான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிக்கும் படம் ஒன்றில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

வனிதாவா? வாத்தா? கஸ்தூரி டீச்சருக்கு எதிராக ஹவுஸ்மேட்ஸ் மாணவர்கள்

பிக்பாஸ் வீட்டில் இன்று பள்ளி டாஸ்க் நடைபெற்று வருகிறது. சேரன், கஸ்தூரி ஆசிரியர்களாகவும், மற்ற ஹவுஸ்மேட்ஸ் மாணவ, மாணவிகளாகவும் நடித்து வருகின்றனர்.

நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் - 2 செயற்கைக்கொள் அடுத்த 16 நிமிடங்களில் பூமியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதையடுத்து பூமியை சுற்றி வரும் வட்டப்பாதையும்

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்: எஸ்பிஐ வங்கியின் புதிய முயற்சி!

வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க கடந்த சில வருடங்களாக வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இதன் மூலம் அதிக மோசடி நடந்து வருவதால்

வனிதா பள்ளி செல்லும் குழந்தையா? பொறுமையை சோதிக்கும் பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க்காக பள்ளி மாணவர்கள் போல் ஹவுஸ்மேட்ஸ் நடித்து வருகின்றனர். கஸ்தூரி பள்ளியின் டீச்சராகவும், ஆசிரியராக சேரனும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மாணவ, மாணவிகளாகவும்