'16 வயதினிலே' படத்தின் தயாரிப்பாளர் மறைவு.. பாரதிராஜா இரங்கல்..!

  • IndiaGlitz, [Wednesday,July 12 2023]

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்த ’16 வயதினிலே’ என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்ஏ ராஜ்கண்ணு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

‘16 வயதினிலே’ ’கிழக்கே போகும் ரயில்’ ‘கன்னிப்பருவத்திலேயே’ ’வாலிபமே வா’ ’பொண்ணு பிடிச்சிருக்கு’ ’எங்க சின்ன ராசா’ மற்றும் கமல்ஹாசனின் ’மகாநதி’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள இவர் ’அர்த்தங்கள் ஆயிரம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தனது முதல் பட தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

16 வயதினிலே திரைப்படத்தின்
வாயிலாக என்னை இயக்குனராக
அறிமுகம் செய்து, என் வாழ்வில்
ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற
என் முதலாளி
திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின்
மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது.
அவரின் மறைவு எனக்கும்
என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்

More News

ஆண் உறுப்பை அறுத்து மருத்துவ மாணவர் தற்கொலை… பதற வைக்கும் காரணம்?

தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவம் பயின்றுவரும் மாணவர் ஒருவர் தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டு கொடூரமாக தற்கொலை செய்துகொண்டுள்ளர்

ஆண் உறுப்பை அறுத்து மருத்துவ மாணவர் தற்கொலை… பதற வைக்கும் காரணம்?

தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவம் பயின்றுவரும் மாணவர் ஒருவர் தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டு கொடூரமாக தற்கொலை செய்துகொண்டுள்ளர்.

குழந்தைகள் படம் இயக்குகிறார் டிராஃபிக் ராமசாமி இயக்குநர்..!

குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டா? அதுவும் குழந்தைகள் படம் என்றால் சொல்லவே வேண்டாம்.

வெள்ளக்காடான வட இந்தியா? கவிதை வடித்து வருத்தம் தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக வட இந்தியா முழுக்கவே பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

'பிக்பாஸ் சீசன் 7' தொடங்குவது இந்த தேதியிலா? 3 மாதம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இதுவரை 6 சீசன் முடிவடைந்துள்ளன என்பதும் 6 சீசன்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.