படுக்கை காலி இல்லாததால் ஆம்புலன்ஸில் உயிரிழந்த 16 மாத குழந்தை: பெற்றோர் கதறலின் பரிதாப வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
மருத்துவமனையில் படுக்கை காலி இல்லை என்பதால் 16 மாத குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டதால் ஆம்புலன்ஸில் காத்திருந்த அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை காலியாக இல்லை என்பதால் சில மணி நேரம் காத்திருக்கும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
படுக்கை காலி இல்லை என்றாலும் பரவாயில்லை, ஆம்புலன்சில் இருக்கும் தனது குழந்தைக்கு சிகிச்சை அளிக்குமாறு அந்த குழந்தையின் தாய் கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க யாரும் முன்வரவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் படுக்கை காலியாகும் என்று காத்திருந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை வாசலிலேயே ஆம்புலன்சில் பிணமாக இருக்கும் தங்கள் குழந்தையை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது.
A mother wailing/ pleading in front of #KGH #Vizag asking for admission & treatment for her 16-month old baby girl who reportedly tested #Covid+ve; she says 'we don't want bed, just treat my baby'; baby died after 90 minutes at doorstep of Hosp @AndhraPradeshCM @ndtv @ndtvindia pic.twitter.com/bjgW4juY3f
— Uma Sudhir (@umasudhir) April 28, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments