படுக்கை காலி இல்லாததால் ஆம்புலன்ஸில் உயிரிழந்த 16 மாத குழந்தை: பெற்றோர் கதறலின் பரிதாப வீடியோ!

மருத்துவமனையில் படுக்கை காலி இல்லை என்பதால் 16 மாத குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டதால் ஆம்புலன்ஸில் காத்திருந்த அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை காலியாக இல்லை என்பதால் சில மணி நேரம் காத்திருக்கும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

படுக்கை காலி இல்லை என்றாலும் பரவாயில்லை, ஆம்புலன்சில் இருக்கும் தனது குழந்தைக்கு சிகிச்சை அளிக்குமாறு அந்த குழந்தையின் தாய் கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க யாரும் முன்வரவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் படுக்கை காலியாகும் என்று காத்திருந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை வாசலிலேயே ஆம்புலன்சில் பிணமாக இருக்கும் தங்கள் குழந்தையை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது.
 

More News

சமரச பேச்சுவார்த்தை என்ன ஆச்சு? மீண்டும் நீதிமன்றம் செல்லும் 'இந்தியன் 2' வழக்கு!

'இந்தியன் 2' படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைக்கா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது என்பது தெரிந்ததே.

கொரோனாவால் இறந்தவர் உடலை வாங்க மறுக்கும் உறவுகள்...! உதவிக்கரம் நீட்டும் இஸ்லாமிய அமைப்புகள்...!

கோவையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை, உறவினர்கள் வாங்க மறுத்ததால், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் உடல்களை அடக்கம் செய்து வருகின்றன.

மயிலாடுதுறை பேரூராட்சி பகுதியில் நாளை 144 தடை உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பேரூராட்சி பகுதிகளில் நாளை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என அம்மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாஸ் நடிகருக்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

தெலுங்கு திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 

நகைகளை அடகு வைத்து கொரோனா நோயாளிகளுக்கு உதவிய கோவை தம்பதி!

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தம்பதி சென்றுள்ளனர்.