உலகம் முழுவதும் 16 மொழிகளில் ரிலீஸ் ஆகும் சிம்பு படம்?

  • IndiaGlitz, [Wednesday,July 08 2015]

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு நடித்த 'வாலு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதால், சிம்பு ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இந்நிலையில் சிம்பு நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'கான்' என்ற திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தம் 16 மொழிகளில் வெளியாகவுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். தமிழ் நடிகர் ஒருவர் நடித்த படம் ஒன்று இவ்வளவு அதிகமான மொழிகளில் வெளியாவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.


இயக்குனர் செல்வராகவன் இன்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, "கான் திரைப்படத்தை சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளேன். உலக சினிமா ரசிகர்கள் இதை விரும்புவார்கள் என நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, 'உலகில் அதிக மக்களால் பேசப்படும் ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், உள்பட மொத்தம் 16 மொழிகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும், வெளிநாட்டு மொழிகளில் ரிலீஸ் செய்யும்போது பாடல்களை நீக்குவது உள்பட சில விஷயங்கள் குறித்து ரிலீஸின்போது முடிவு செய்யப்படும்' என்றும் கூறியுள்ளார்.

சிம்பு, கேதரின் தெரசா, டாப்சி, ஜெகபதி பாபு, சுரேஷ் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். GLO ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கீதாஞ்சலி செல்வராகவன் மற்றும் சித்தார்த் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.