close
Choose your channels

தினந்தோறும் புதிய உச்சம்: இன்று தமிழகத்தில் 1500க்கும் மேல் கொரோனா பாதிப்பு

Sunday, June 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் 1400க்கும் மேற்பட்டவர்களும், கடந்த ஒரு வாரமாக சென்னையில் 1000க்கும் மேற்பட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று புதிய உச்சமாக தமிழகத்தில் 1500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

இன்று தமிழகத்தில் 1515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31667ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1515 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1,146 பேர்கள் என்பதால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 604 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16999 என உயர்ந்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 16275 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 592,970 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment