15 வயது சிறுமியின் குளிக்கும் வீடியோ: மிரட்டிய 3 இளைஞர்களால் ஏற்பட்ட விபரீதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
15 வயது பள்ளி சிறுமியை குளிக்கும்போது வீடியோ எடுத்து மூன்று இளைஞர்கள் மிரட்டியதால் ஏற்பட்ட விபரீத சம்பவம் ஒன்று வேலூர் அருகே நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வேலூரை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ்1 செல்லவிருந்தார். இந்த நிலையில் அந்த மாணவி தனது வீட்டின் பின்புறம் உள்ள திறந்த வெளியில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது அவருடைய வீட்டிற்கு அருகில் இருந்த மூன்று இளைஞர்கள் அவர் குளிப்பதை வீடியோ எடுத்தனர்
அதன் பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி தங்களுடைய ஆசைக்கு இணங்குமாறும், 5 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் இல்லை என்றால் அந்த குளியல் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டினர். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பள்ளி மாணவி தனது சித்தியிடம் 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால் பணமெல்லாம் வேண்டாம், போலீசில் புகார் அளிப்போம் என்று அவருடைய சித்தி கூறியுள்ளார்
இந்த நிலையில் மீண்டும் அந்த இளைஞர்கள் சிறுமிக்கு போன் செய்து உடனடியாக தாங்கள் கூறும் இடத்திற்கு வராவிட்டால் வீடியோவை பேஸ்புக்கில் பதிவு செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று அவர்களிடம் சண்டை போட்டுள்ளார். அவருடைய ஆவேசத்தை பார்த்து இரண்டு இளைஞர்கள் ஓடிவிட்டனர். பின்னரும் ஒருவரிடம் போனை வாங்கி வீடியோக்களை டெலீட் செய்தார். அதில் தன்னுடைய பாட்டி உள்பட பலர் குளிக்கும் வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
இந்த நிலையில் திடீரென மூன்று இளைஞர்களிடம் இருந்து மீண்டும் மிரட்டல் வந்ததால் அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்து மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பள்ளி மாணவி உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனை சென்று சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவியை குளிக்கும் போது வீடியோ எடுத்த மிரட்டியதன் காரணமாக தற்போது அந்த மாணவி உயிருக்கு போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com