வீட்டுப்பாடம் செய்யாத சிறுமிக்கு சிறை தண்டனை: நீதிமன்றத்திற்கு குவியும் கண்டனங்கள்!
- IndiaGlitz, [Saturday,July 18 2020]
வீட்டுப்பாடம் செய்யாத சிறுமிக்கு சிறை தண்டனை என தீர்ப்பளித்த நீதிமன்றத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவிலும் ஆன்லைனில் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அமெரிக்க-ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ் என்ற 15 வயது மாணவி வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கில் அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் ’மாணவி வீட்டு பாகத்தை முடிக்காமல் இருந்தது நன்னடத்தை விதிகளை மீறியது என்றும் இது சமூகத்திற்கான அச்சுறுத்தல்’ என்றும் தீர்ப்பளித்தது சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகள் நீதிமன்ற வாசலில் திரண்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தண்டனை வழங்கப்பட்ட மாணவி கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாகுபாடான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது
இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் வரும் திங்கட்கிழமை இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவேற்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 15 வயது சிறுமி ஒருவரை வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக சிறைக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம் மற்றும் நீதிமன்றத்தால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது