சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவின் படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,December 28 2016]

சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்த மாதம் 15 முதல் 22ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்து. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினை அடுத்து இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டு வரும் ஜனவரி 5 முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த விழாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் நடித்த அடிமைப்பெண்', மற்றும் ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய இரண்டு திரைப்படங்களையும் சிறப்பு திரைப்படங்களாக திரையிட விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஏற்கனவே இந்த விழாவில் '24, அம்மா கணக்கு, தேவி, தர்மதுரை, இறைவி, ஜோக்கர், கர்மா, நானும் ரௌடி தான், பசங்க-2, ரூபாய், சில சமயங்களில், உறியடி' ஆகிய 12 தமிழ்ப்படங்கள் திரையிடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பத்திரிகையாளர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் எழுதிய நன்றி கடிதம்

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் என இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர்...

அ.இ.அ.தி.மு .க பொதுச்செயலாளரை மக்களே தேர்ந்தெடுக்கட்டும் நடிகை லதா அறிக்கை

புதிய அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடவுள்ள நிலையில் எம்.ஜி.ஆருடன்...

அமீர்கானின் 'டங்கல்' ரீமேக்கில் அஜித். பிரபல நடிகை கருத்து

கடந்த வாரம் வெளியான அமீர்கானின் 'டங்கல்' திரைப்படம் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஹிட்டாகியுள்ளது...

விக்ரம்-விஜய்சந்தர் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' வெற்றி படத்தை அடுத்து 'வாலு' பட இயக்குனர் விஜய்சந்தர்...

நயன்தாராவின் அடுத்த அவதாரம் பத்திரிகையாளர்?

தென்னிந்திய திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி நாயகியாக நடித்து வரும் நயன்தாரா இன்றளவும் பிசியான நடிகையாக உள்ளார்...