பள்ளி மாணவர்களைத் தாக்கும் கொரோனா… அமைச்சர் வைத்த முக்கிய வேண்டுகோள்!
- IndiaGlitz, [Friday,September 17 2021]
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத் துவக்கத்தில் இருந்து 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத் துவக்கத்தில் இருந்து இதுவரை 148 மாணவர்களுக்குத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களின் பாதுகாப்பே மிக முக்கியம். அதனால் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி யாரும் பள்ளிக்கு வரவழைக்க வேண்டாம் என்று பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 1693 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் பொது ஊரடங்கு விதிமுறைகள் அமலுக்கு வருமா? கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் பள்ளிகள் கொரோனா பாதிப்பின் மையங்களாக மாறிவிட்டனவா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்குப் பதிலளித்த அதிகாரிகள் பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டுவதே கொரோனா பாதிப்புக்கு காரணம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து தமிழகப் பள்ளிக் கல்வித்துறை தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவது குறித்து தமிழக அரசு என்ன முடிவெடுக்கும் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.