கொரோனா சந்தையாக மாறிய கோயம்பேடு சந்தை: 146 பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென காய்கறிகள், பழங்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் குவிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்பட்டது. எதிர்பார்த்தது போலவே அதன் தாக்கம் தற்போது ஒருவாரம் கழித்து தெரிய வருகிறது

இன்று காலை வரை கோயம்பேடு சந்தை மூலம் 119 பேர்களுக்கு சென்னை உள்பட பல நகரங்களுக்கு கொரோனா பரவியதாக தகவல்கள் வந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி கோயம்பேடு சந்தையால் ஏற்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை 146ஆக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்த விழுப்புரத்தை சேர்ந்த 35 பேருக்கு சற்றுமுன் கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த பகுதியை சேர்ந்த எத்தனை பேர் என்பதை பார்ப்போம்

1.சென்னையில் 63 பேர்

2.காஞ்சிபுரம் – 7

3.கடலூர் – 17

4.விழுப்புரம் – 35

5.அரியலூர் – 22

6.பெரம்பலூர் – 1

7. தஞ்சாவூர் - 1

மேலும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் உள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது

More News

கொரோனா நச்சுயிரி மனித முயற்சியா? இயற்கை நிகழ்ச்சியா? வைரமுத்து 

கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் ஒரு பக்கம் மிகவும் சீரியசாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.  குறிப்பாக அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த கொரோனா வைரஸை

'துப்பாக்கி 2' படம் குறித்த தகவலை தெரிவித்த சந்தோஷ் சிவன்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்க இருக்கிறார் என்பதும்

கமல் எழுதிய கவிதையை 'குணா' பாணியில் கலாய்த்த பிக்பாஸ் நடிகை

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கவிதை நடையில் சில கருத்துக்களை தெரிவித்து வருவது வழக்கமான ஒன்றே.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 37,776 என இருந்த நிலையில் சற்றுமுன் மத்திய அரசு அறிவித்த தகவலின்படி இந்தியாவில்

200 ரூபாய் கொடுத்தால் போதும், நடிகை ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடலாம்

200 ரூபாய் கொரோனா வைரஸ் தடுப்பு நிதி உதவி செய்தால் போதும் நடிகை ஸ்ரேயா சரணுடன் டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது