கொரோனா சந்தையாக மாறிய கோயம்பேடு சந்தை: 146 பேர் பாதிப்பு
- IndiaGlitz, [Sunday,May 03 2020]
கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென காய்கறிகள், பழங்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் குவிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்பட்டது. எதிர்பார்த்தது போலவே அதன் தாக்கம் தற்போது ஒருவாரம் கழித்து தெரிய வருகிறது
இன்று காலை வரை கோயம்பேடு சந்தை மூலம் 119 பேர்களுக்கு சென்னை உள்பட பல நகரங்களுக்கு கொரோனா பரவியதாக தகவல்கள் வந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி கோயம்பேடு சந்தையால் ஏற்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை 146ஆக உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்த விழுப்புரத்தை சேர்ந்த 35 பேருக்கு சற்றுமுன் கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த பகுதியை சேர்ந்த எத்தனை பேர் என்பதை பார்ப்போம்
1.சென்னையில் 63 பேர்
2.காஞ்சிபுரம் – 7
3.கடலூர் – 17
4.விழுப்புரம் – 35
5.அரியலூர் – 22
6.பெரம்பலூர் – 1
7. தஞ்சாவூர் - 1
மேலும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் உள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது