தமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு
- IndiaGlitz, [Saturday,June 06 2020]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று 1400க்கும் மேற்பட்டவர்கள் அதாவது 1438 பேர் பாதிப்பு அடைந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில் இன்றும் நேற்றை விட 20 பேர் அதிகமாக அதாவது 1458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டாவது நாளாக 1400க்கும் மேற்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இன்று தமிழகத்தில் 1458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,152ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1458 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1146 பேர்கள் என்பதால் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20993 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 633 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 என உயர்ந்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 16,022 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 576,695 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது