ஹோட்டல் உரிமையாளருக்கு 1446 ஆண்டு சிறை!!! அப்படி என்ன செய்தார் தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
தாய்லாந்து நாட்டில் ஒரு ஹோட்டல் தனது நிறுவனத்தை பிரபலப்படுத்து வதற்காக எடுத்த முடிவு தற்போது அவர்களுக்கே பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. தாய்லாந்தின் லீம்கென் இன்ஃபைனட்கள் என்ற பிரபல கடல் உணவுகளை விற்கும் ஒரு ஹோட்டல் நிறுவனம், தனது உணவுகளை பிரபலப் படுத்துவதற்காக இணையத்தில் வவுச்சர்களை விற்க ஆரம்பித்தனர். அப்படி பாங்காங் நகரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இணையத்தில் பணத்தை செலுத்தி முன்கூட்டியே உணவுகளை ஆர்டர் கொடுத்து இருந்தனர். ஹோட்டல் நிறுவனத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இணையத்தின் வழியாக உணவுகளை ஆர்டர் செய்து வந்தனர். வவுச்சர்களின் விற்பனை அதிகமாகி கொண்டே இருந்த சமயத்தில் திடீரென ஹோட்டல் உரிமையாளர்கள் இருவரும் கடையை காலி செய்து விட்டு வீட்டிற்கு கிளம்பி விட்டனர்.
உணவுகளை ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களின் பணம் திருப்பி செலுத்தப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. ஆனால் பணமும் கிடைக்காமல் உணவும் வாராமல் ஏமாந்த வாடிக்கையாளர்கள் கடைசியில் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. அப்படி இணைய மோசடி செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா 50 மில்லியன் தாய் பட் (இந்திய ரூபாயில் 10 கோடி). வழக்கை விசாரித்த தாய்லாந்தின் பாங்காங் நீதிமன்றம் எவ்வளவு குற்றங்கள் இருக்கிறது எனக் கணக்கெடுத்து ஹோட்டல் உரிமையாளர்கள் இரண்டு பேருக்கும் 1446 ஆண்டு சிறை தண்டனையை அசால்டாக வழங்கி இருக்கிறது.
ஒருவனால் இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ முடியுமா என்ற கேள்வி கூட வரலாம். சில நேரங்களில் நீதிபதிகள் இதுபோன்று வரையறையே இல்லாமல் சிறை தண்டனைகளை வழங்கவதும் உண்டு. கடந்த 2017 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப் பட்ட ஒருவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் 13 ஆயிரம் ஆண்டு சிறை தண்டனை வழங்கியிருக்கிறது. தற்போது மொத்தம் 818 வாடிக்கையாளர்களுக்கு ஹொட்டல் உரிமையாளர்கள் பணம் கொடுக்க வேண்டும். ஆனால் 375 பேருக்குத்தான் அவர்கள் இதுவரை பணத்தைக் கொடுத்து இருக்கின்றனர்.
இந்நிலையில் ஹொட்டல் உரிமையாளர்களான அயசாட் பவோன் பன்சார்க், ப்டிபாசன் பவோன்பன்சா என்ற இரு நபர்களின் மீது இதுவரை 723 குற்றங்கள் நிரூபிக்கப் பட்டு இருப்பதாக அந்நாட்டின் ஊடகம் பிபஎஸ் தெரிவிக்கிறது. 723 குற்றங்களுக்கு இரண்டை மடங்கு தண்டையாக 1446 ஆண்டு சிறை தண்டனையை நீதிபதிகள் வழங்கி விட்டனர். குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கெண்டதன் காரணமாக தற்போது தண்டனை பாதியாக குறைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு சட்ட விதிகளின் படி ஒருவருக்கு உயர்ந்த பட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் மட்டுமே வழங்க முடியும். ஆனால் இப்போது 1446 ஆண்டில் பாதி 723 ஆண்டு சிறை தண்டனையை இருவரும் சிறையில் கழித்தாக வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout