சி.வி.குமாரின் நிறுவனத்தின் '144' முடிந்தது

  • IndiaGlitz, [Wednesday,October 14 2015]

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட சமீபத்தில் வெளியான 'இன்று நேற்று நாளை' வரை பல வெற்றிப்படங்களை தயாரித்த சி.வி.குமார் அவர்களின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படமான '144' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மிர்ச்சி சிவா, அசோக்செல்வன், ஓவியா, மற்றும் 'ஆண்மை தவறேல்' நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். சீன் ரோல்டான் இசையமைத்துள்ள இந்த படத்தை குருவேத் ஒளிப்பதிவும், லியோ ஜான்பால் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை சிவி குமார், அபிஅபி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அசோக்செல்வன் ஒரு கார் ரேஸராக நடித்துள்ளார். பெரும்பாலான படப்பிடிப்பு மதுரையில் நடந்ததாகவும், இந்த படத்திற்காக பைக்ரேஸில் சில ரிஸ்க்கான காட்சிகளில் அசோக் செல்வன் டூப் இன்றி நடித்ததாகவும் கூறப்படுகிறது. சிவா-ஓவியா மற்றும் அசோக்செல்வன் - ஸ்ருதிராமகிருஷ்ணன் ஜோடிகளாக நடித்திருக்கும் இந்த படத்தில் காமெடிக்கும் முக்கியத்துவம் இருக்கும் என கூறப்படுகிறது. சிவா-ஓவியா ஜோடி ஏற்கனவே சுந்தர் சியின் 'கலகலப்பு' படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.