தமிழகம் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்: 1500ஐ நெருங்கியதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கொரோனாவின் பாதிப்பு 1500ஐ நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த எண்ணிக்கை அப்போது மிகக்குறைவாக தெரியும் என்று மருத்துவர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.

இன்று தமிழகத்தில் 1438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28694.ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1438 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1116 பேர்கள் என்பதால் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,137ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றுதான் தமிழகத்திலும் சென்னையிலும் இதுவரை அதிகமானோர் பாதிக்கப்பட்டுளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 861 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15762 என உயர்ந்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 15,692 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 560,673 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது