கொரோனாவின் கொடூரம்....!பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் சுமார் 1400 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவித்து வருகிறார்கள். இச்செய்தி காண்போர் நெஞ்சை கண்கலங்க வைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பொதுமக்களை பெருமளவில் பாதித்துள்ளது. பொருளாதார ரீதியாக கடும் சிரமத்தை சந்தித்து வரும் மக்கள், தங்கள் உறவுகளை இழந்து வாடி வருகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அந்தவகையில் இந்த பெரும்தொற்று காரணமாக சுமார் 1400 குழந்தைகள், தங்கள் பெற்றோரையோ அல்லது தங்கள் தாயையோ அல்லது தகப்பனாரையோ இழந்து வாடி வருகிறார்கள். இந்த தகவலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அறிவித்துள்ளது. இதில் 50 சிறார்களின் பெற்றோர்கள் சென்ற வருடம் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை தர இருப்பதாகவும் அறிவித்திருந்தது. இதேபோல் இந்த பேரிடர் காலத்தில் பசி, வறுமை காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்களுக்கு எந்த நிவாரணத்தொகையையும் அறிவிக்கவில்லை, அதற்கான எந்த நடவடிக்கைகளையும் தமிழகஅரசு எடுக்கவில்லை என்று தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பதாவது,"கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் நடப்பாண்டு ஜூன் -5 ஆம் தேதி வரை, 30 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களில், தாயையோ, தகப்பனையோ இழந்து வாடி வருகிறார்கள். இதில் கொரோனாவால் 802 பேர் உயிரிழந்திருப்பது தமிழகத்தில் மட்டுமே" என்று கூறியுள்ளது.
கொரோனா பெரும்தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விவரங்களை, ஒவ்வொரு மாநில அரசும் வெளியிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சிறுவர்களுக்கு உதவ சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வந்து சேவை செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments