கொரோனாவின் கொடூரம்....!பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்....!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

தமிழகத்தில் சுமார் 1400 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவித்து வருகிறார்கள். இச்செய்தி காண்போர் நெஞ்சை கண்கலங்க வைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பொதுமக்களை பெருமளவில் பாதித்துள்ளது. பொருளாதார ரீதியாக கடும் சிரமத்தை சந்தித்து வரும் மக்கள், தங்கள் உறவுகளை இழந்து வாடி வருகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அந்தவகையில் இந்த பெரும்தொற்று காரணமாக சுமார் 1400 குழந்தைகள், தங்கள் பெற்றோரையோ அல்லது தங்கள் தாயையோ அல்லது தகப்பனாரையோ இழந்து வாடி வருகிறார்கள். இந்த தகவலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அறிவித்துள்ளது. இதில் 50 சிறார்களின் பெற்றோர்கள் சென்ற வருடம் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை தர இருப்பதாகவும் அறிவித்திருந்தது. இதேபோல் இந்த பேரிடர் காலத்தில் பசி, வறுமை காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்களுக்கு எந்த நிவாரணத்தொகையையும் அறிவிக்கவில்லை, அதற்கான எந்த நடவடிக்கைகளையும் தமிழகஅரசு எடுக்கவில்லை என்று தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பதாவது,கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் நடப்பாண்டு ஜூன் -5 ஆம் தேதி வரை, 30 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களில், தாயையோ, தகப்பனையோ இழந்து வாடி வருகிறார்கள். இதில் கொரோனாவால் 802 பேர் உயிரிழந்திருப்பது தமிழகத்தில் மட்டுமே என்று கூறியுள்ளது.

கொரோனா பெரும்தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விவரங்களை, ஒவ்வொரு மாநில அரசும் வெளியிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சிறுவர்களுக்கு உதவ சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வந்து சேவை செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.
 

More News

ரசிகர்களை ஏமாற்றிய ஃபகத் பாசில் திரைப்படம்… ஓடிடியில்  வெளியாகும் எனத் தகவல்!

மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும் அதிக வரவேற்பை பெற்ற நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். இவர்  நடித்த “மாலிக்“ திரைப்படம்

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் கலக்கப் போகும் தென்னிந்தியப் படங்கள்!

பிரசித்திப் பெற்ற ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா 2021, இன்று முதல் துவங்கி வரும் ஜுன் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலில் ஏற்கும் வித்தியாசமான கதாபாத்திரம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பின்னர் 'பண்ணையாரும் பத்மினியும்' 'காக்கா முட்டை

விஷால் புகார் குறித்து கூலான பதில் கூறிய ஆர்பி செளத்ரி!

நடிகர் விஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை தி நகரில் உள்ள காவல்துறை இணை ஆணையரிடம் தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மீது புகார் ஒன்றை அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பி டீக்கடைக்காரர் வைத்த வேண்டுகோள்… இணையத்தில் வைரல்!

மகாராஷ்டிராவை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100ஐ மணி ஆர்டரில் அனுப்பி வைத்ததோடு ஒரு கடிதத்தையும் அனுப்பி உள்ளார்.