வரும் டிசம்பரில் மிகப்பெரிய அழிவை சந்திப்போம்: 14 வயது ஜோதிடர் கணிப்பு

பிரபல ஜோதிடரான 14 வயது அபிக்யா ஆனந்த் உலகம் முழுவதும் ஜனவரி முதல் கண்ணுக்கு தெரியாத வைரஸ் தாக்கும் என்றும் அந்த வைரஸ் மே மாதம் வரை இருக்கும் என்றும் அதன்பின் படிப்படியாக வைரஸின் தாக்கம் குறையும் என்று கடந்த ஆண்டே கணித்து கூறியிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அபிக்யா ஆனந்த் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளா.ர் அதில் அவர் கொரோனா குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் இன்னும் ஒரு ஆபத்து குறித்தும் கூறியுள்ளார். அந்த வீடியோவில் அபிக்யா மேலும் கூறியதாவது:

மே 29-ஆம் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் என்று தான் கூறினேன். ஆனால் கொரோனா முற்றிலும் அழிந்துவிடும் என்று நான் கூறியதாக பலர் தவறாக நினைத்து கொண்டனர். உண்மையில் ஜூன் மாதம் 30ஆம்தேதி தான் கொரோனா வைரசின் தாக்கம் குறையும்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்த பின்னர் உலகம் முழுவதும் கடும் உணவுப்பஞ்சம் ஏற்படும். அதற்கு முன்கூட்டியே சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் விவசாயிகளை மட்டும் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் விவசாயிகள் சாதாரணமாகவே சமூக விலகலை கடைபிடித்து தான் வேலை செய்வார்கள் என்பதால் அவர்களை தொடர்ந்து பணி செய்து உணவு தயாரிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் விவசாயிகளின் வேலையை நிறுத்தினால் பெரும் ஆபத்து ஏற்படும். இது எந்த அரசுக்கும் புரியவில்லை.

இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் உணவுக்கு பதிலாக மாற்று உணவை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை. இப்போது நாம் கொரோனாவை அழித்தாலும் கொரோனா போல் நூறு வைரஸ்கள் எதிர்காலத்தில் தாக்கும். அதற்கு நாம் தயாராக வேண்டுமென்றால் இயற்கையான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டும். மேலும் உணவுக்காக விலங்குகளை கொல்வதையும் நிறுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கம் ஜூன் இறுதியில் குறைந்து ஜூலை முதல் டிசம்பர் வரை உலகம் அமைதியான சூழலில் இருக்கும். ஆனால் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை உலகம் ஒரு மிக மோசமான அழிவை சந்திக்கும். அது கொரோனாவை விட பலமடங்கு அழிவை ஏற்படுத்தும். அதுகுறித்து விரைவில் விரிவாக கூறுகிறேன்’ என்று அபிக்யா ஆனந்த் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

துப்புரவு பணியாளர்களுக்கு பாதபூஜை: காலில் விழுந்து கும்பிட்ட பொதுமக்கள்

துப்புரவு பணியாளர்கள் என்றாலே இளக்காரமாக பார்த்த பலர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் போது அவர்கள் செய்யும் தன்னலம் கருதாத, தியாக மனப்பான்மையுடன் கூடிய பணியை பார்த்து

23 ஆயிரம் சினிமா தொழிலாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.3000 டெபாசிட் செய்த பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் சினிமா தொழிலாளிகளின் பசியைப் போக்குவதற்காக

விஜயகாந்த் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு: மருத்துவமனையாக மாறும் கல்லூரி

கொரோனா வைரஸால் தமிழகத்தில் தினந்தோறும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும்

சமூக விலகலை கடைபிடிக்க கூறிய 'பொன்னியின் செல்வன்' நடிகருக்கு கொலை மிரட்டல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைத்து நாட்டு அரசுகளும் கூறிவரும் ஒரே அறிவுரை சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்

கொரோனாவிற்கு பலியான கிராமி விருது பெற்ற பிரபலம்: ரசிகர்கள் அதிர்ச்சி

உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர் முதல் பாமரன் முதல் பதவியில் இருப்பவர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி தாக்கி வருகிறது