ஆபாச இணையதளத்தில் 14 வயது நடிகையின் வீடியோ: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!
- IndiaGlitz, [Tuesday,October 20 2020]
14 வயதாக இருக்கும்போது நடிகை ஒருவர் நடித்த எடிட் செய்யப்படாத காட்சிகளின் வீடியோ ஆபாச இணையதளத்தில் வெளியாகியுள்ளதை அடுத்து அந்த நடிகை தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ’பார் சேல்’ இந்த படத்தில் முகேஷ், சாய்குமார், காதல் சந்தியா உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் காதல் சந்தியாவின் தங்கையாக நடித்தவர் சோனா ஆபிரகாம். இந்த படத்தில் அவர் நடிக்கும்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் 14 வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் ஒரு பலாத்கார காட்சி ஒன்று இருப்பதாக இயக்குனர் தெரிவிக்கவே அந்த காட்சியில் நடிக்க முதலில் சோனா ஆபிரகாம் மறுத்துள்ளார். ஆனால் இந்த காட்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தி சோனாவை இந்த காட்சியில் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்ததாக தெரிகிறது. படமும் எடிட் செய்யப்பட்டு வெளியாகி விட்டது
இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து எடிட் செய்யப்படாத சில காட்சிகள் தற்போது ஆபாச இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சோனா காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்தார். தற்போது சட்டம் படித்து கொண்டிருக்கும் சோனா ஆபிரகாம் பலமுறை காவல் துறையில் இதுகுறித்து தெரிவித்தும் அந்த வீடியோ தொடர்ந்து ஆபாச இணையதளத்தில் வெளியாகி கொண்டிருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். ஆனால் அவரை அவரது பெற்றோர்கள் காப்பாற்றியுள்ளனர்
இந்த சம்பவம் குறித்து சோனா கூறுகையில் ’தனக்கு விவரம் தெரியாத வயதில் அந்த படத்தில் நடித்ததாகவும், தற்போது அந்த படத்தின் எடிட் செய்யப்படாத காட்சிகள் ஆபாச இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்
இந்த நிலையில் நடிகை சோனாவுக்கு மலையாள திரையுலகினர் பலரும் ஆதரவு கரம் நீட்டி உள்ளனர். எடிட் செய்யப்படாத காட்சிகளை ஆபாச இணையதளத்தில் பதிவு செய்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை தேவை என குரல் கொடுத்து வருகின்றனர்.